கார் டிரைவர் மீது தாக்குதல்

தேனி அருகே கார் டிரைவரை தாக்கிய 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2023-03-28 18:45 GMT

தேனி அருகே மஞ்சிநாயக்கன்பட்டி முத்துநகரை சேர்ந்த குருசாமி மகன் பிரபாகரன் (வயது 31). கார் டிரைவர். இவரது மனைவி, பூதிப்புரம் அரசு பள்ளி அருகே கூழ் கடை நடத்தி வருகிறார். அதே பகுதியில் அதே ஊரைச் சேர்ந்த பெரியகருப்பன் என்பவர் இளநீர் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் பெரியகருப்பன் தனது கடையில் கூழ் வியாபாரமும் செய்ய தொடங்கினார். இதனால் வியாபாரம் பாதிக்கப்பட்டது குறித்து பெரியகருப்பனிடம், பிரபாகரன் கேட்டுள்ளார்.

அப்போது அவரை பெரியகருப்பன் மற்றும் மனைவி முருகேஸ்வரி உள்பட சிலர் தாக்கினர். இதில் காயம் அடைந்த பிரபாகரன் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் பெரியகருப்பன், முருகேஸ்வரி உள்பட 6 பேர் மீது பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்