ஆட்டோ டிரைவர் மீது தாக்குதல்; வாலிபர் கைது
ஆட்டோ டிரைவரை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
நெல்லையை அடுத்த பேட்டை காமராஜர் நகரைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் பழனி (வயது 52). நேற்று மேலப்பாளையம் குறிச்சி சந்திப்பில் பயணிகளை ஏற்றி செல்வது தொடர்பாக இவருக்கும், மேலப்பாளையத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ரசூல் மைதீனுக்கும் (28) இடையே தகராறு ஏற்பட்டது.
அப்போது ஆத்திரம் அடைந்த ரசூல் மைதீன் அவதூறாக பேசி, கட்டையால் பழனியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மேலப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எபனேசர் வழக்குப்பதிவு செய்து ரசூல் மைதீனை கைது செய்தார்.