2 பேர் மீது தாக்குதல்; வாலிபர் கைது

மேலப்பாளையத்தில் 2 பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-05-11 19:40 GMT

நெல்லை மேலப்பாளையம் மேலநத்தம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சுந்தர் (வயது 28). இவரின் உறவினர் சுரேஷ் (28). இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் மேலநத்தம் பகுதியில் நடந்த கோவில் கொடை விழாவிற்கு சென்று வந்தனர். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் (21) உள்ளிட்டவர்கள் முன்விரோதம் காரணமாக சுந்தர், சுரேஷ் ஆகியோரை இரும்பு கம்பி மற்றும் கத்தியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அவர்கள் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேசை கைது செய்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்