தூத்துக்குடியில் பணம் கேட்டு தொழிலாளிக்குகொலைமிரட்டல்விடுத்த வாலிபர் கைது

தூத்துக்குடியில் பணம் கேட்டு தொழிலாளிக்கு கொலைமிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-09-14 11:03 GMT

தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியராஜ் மேற்பார்வையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அக்சார் பெயிண்ட் ரவுண்டானா அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டு இருந்தவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் தூத்துக்குடி போல்பேட்டையை சேர்ந்த சங்கர சிவன் மகன் சுந்தர் சிவன் (வயது 27) என்பதும், அவர் அந்த பகுதியில் வந்து கொண்டிருந்த தொழிலாளி ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு தகராறு செய்து கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து போலீசார் சுந்தர்சிவனை கைது செய்தனர். இது குறித்து தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்