பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமை அரசு பஸ் கண்டக்டர் மீது வழக்கு

பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய அரசு பஸ் கண்டக்டர் மீது போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Update: 2022-08-17 16:08 GMT

திண்டிவனம் கர்ணாவூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் விஜயராகவன் (வயது 37). இவர் திண்டிவனம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் கண்டக்டராக உள்ளார். இவருடைய மனைவி ஜெயஸ்ரீ (32). இவர்களுக்கு 1½ வயதில் ஹரிஸ்வர் என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்த திருமணத்தின்போது ஜெயஸ்ரீயின் பெற்றோர் சார்பில் 20 பவுன் நகை சீர்வரிசை செய்துள்ளனர். இந்த சூழலில் மேலும் 40 பவுன் நகை வாங்கி வரும்படி கேட்டு ஜெயஸ்ரீயை அவரது கணவர் விஜயராகவன் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் ஜெயஸ்ரீயை அவரது பெற்றோர் வீட்டிற்கு விஜயராகவன் அனுப்பிவிட்டார்.

இதுகுறித்து ஜெயஸ்ரீ, விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் விஜயராகவன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்