பட்டா கேட்டுகலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

பட்டா கேட்டு கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனா்.

Update: 2023-02-20 18:45 GMT

திருவெண்ணெய்நல்லூர் தாலுகா அண்டராயனூர் கிராமம் அண்ணா நகரில் 116 குடும்பத்தினர் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக 3 தலைமுறைகளாக வசித்து வருகின்றனர். இவர்கள் ஏழ்மையிலும் வறுமையான சூழலில் வசித்து வருகின்றனர். இவர்களிடம் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன்கார்டு, வீட்டுவரி ரசீது, மின்சார கட்டண ரசீது அனைத்தும் உள்ளது.

இவர்கள் தாங்கள் வசித்து வரும் பகுதியில் பட்டா வழங்குமாறு பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இதற்காக அவர்கள், தாசில்தார், கோட்டாட்சியர், மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு பலமுறை நடையாய் நடந்தும் இதுநாள் வரையிலும் அவர்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை.

இந்நிலையில் நேற்று அக்குடும்பத்தினர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தாங்கள் வசித்து வரும் பகுதியிலேயே தங்களுக்கு பட்டா வழங்கக்கோரி கோஷம் எழுப்பினர். தொடர்ந்து, போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு பிறகு அவர்கள், மாவட்ட கலெக்டரை சந்தித்து தங்களுக்கு பட்டா வழங்குமாறு கோரிக்கை மனு கொடுத்தனர். மனுவை பெற்ற கலெக்டர் சி.பழனி, இதுகுறித்து பரிசீலனை செய்வதாக கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்