அழகியநாதசாமி கோவில் வைகாசி விசாக திருவிழா
வேதாரண்யம் அருகே அழகியநாதசாமி கோவில் வைகாசி விசாக திருவிழா நடந்தது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே தேத்தாக்குடி வடக்கில் அமைந்துள்ளது அழகியநாத சாமி கோவில். இக்்கோவிலில் உள்ள முருகனுக்கு ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு வைகாசி விசாக திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதை முன்னிட்டு காலை முருகனுக்கு அபிஷேக, ஆராதனை நடக்கிறது. தொடர்ந்து மாவிளக்கு போடுதல், காவடி எடுத்தல் நிகழ்ச்சி, முடி இறக்குதல் நடக்கிறது. மதியம் முருகனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும், இரவு சாமி வீதி உலாவும், வாணவேடிக்கையும் நடக்கிறது . இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் தேத்தாகுடி கிராம மக்கள் செய்து வருகின்றனர்.