முத்துமாரியம்மன் கோவிலில் ஆஷாட நவராத்திரி

சிவகாசி தொழிற்பேட்டை முத்துமாரியம்மன் கோவிலில் ஆஷாட நவராத்திரி விழா நடைபெற்றது.

Update: 2022-07-03 19:57 GMT

சிவகாசி, 

சிவகாசி தொழிற்பேட்டையில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவிலில் கடந்த 29-ந்தேதி ஆஷாட நவராத்திரி விழா தொடங்கியது. இந்த விழா வருகிற 8-ந்தேதி வரை நடக்கிறது. இதில் நேற்று மாலை வளர்பிறை பஞ்சமிபூஜை நடைபெற்றது. தொடர்ந்து முத்துமாரியம்மனுக்கு வராகி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்