ஆஷா ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஆஷா ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-09-15 18:52 GMT

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே வேலூர், திருப்பத்தூர் மாவட்ட குழு ஆஷா ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வேலூர் மாவட்ட தலைவர் சுசிலா தலைமை தாங்கினார். அனிதா, சுமித்ரா உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யு. மாநில குழு உறுப்பினர் எம்.பி.ராமச்சந்திரன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் பரசுராமன், மாவட்ட தலைவர் முரளி உள்ளிட்டோர் கோரிக்கைகள் குறித்து பேசினர்.

ஆஷா ஊழியர்களின் பணியை நிரந்தரம் செய்ய வேண்டும். 10 ஆண்டுகள் பணி முடித்த ஆஷா ஊழியர்களுக்கு கிராம சுகாதார செவிலியர் பதவி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்