சி.எஸ்.ஐ. இம்மானுவேல் ஆலயத்தில்அசனப்பண்டிகை விழா

Update: 2023-08-15 18:07 GMT


உடுமலை-தளி ரோட்டில் அமைந்துள்ள சி.எஸ்.ஐ. இம்மானுவேல் ஆலயத்தில் நேற்று ஆலய மங்கல படைப்பு மற்றும் அசனப் பண்டிகை நடைபெற்றது.3 நாள் நிகழ்ச்சியாக தொடங்கிய இந்த விழாவில் கடந்த 12-ந் தேதி காலை 10:30 மணிக்கு உபவாச கூடுகை நிகழ்ச்சியும் மாலை 6.30 மணிக்கு நற்செய்தி கூட்டமும் நடைபெற்றது. இதையடுத்து 2-ம் நாள் நிகழ்ச்சியாக 13-ந்தேதி நாளை 6:30 மணிக்கு நற்செய்தி கூட்டம் நடைபெற்றது.விழாவின் 3-ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று காலை 9 மணிக்கு சுதந்திர தின கொடியேற்றம் நடந்தது. இதையடுத்து 9.30 மணிக்கு மங்கல படைப்பு ஆதாரனையும் அதைத் தொடர்ந்து அருள் எஸ்.சுதர்சன் இறையாசி வழங்கினார்.

பின்னர் மதியம் 12 மணி அளவில் அசன ஐக்கிய விருந்து நடைபெற்றது. இந்த விழாவில் அருள் எஸ்.மேரி செல்வராணி ஆயர், உதவி ஆயர் லூத்தர் செயலர் ஜெயக்குமார் மற்றும் பொருளாளர் பால் ஜெயச்சந்திரன் அசனப் பொறுப்பாளர் ஸ்டாலின் தலைமையில் அசன குழுவினர்கள் அனைவரும் சேர்ந்து அசன ஐக்கிய விருந்தை நிறைவேற்றினார்கள்.

இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்