கிறிஸ்துவின் ஆலய அசன பண்டிகை
மேல சாத்தான்குளம் கிறிஸ்துவின் ஆலய அசன பண்டிகை நடைபெற்றது.
தட்டார்மடம்:
மேல சாத்தான்குளம் கிறிஸ்துவின் ஆலய பிரதிஷ்டை மற்றும் அசன பண்டிகை 6 நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் உபவாச ஜெபம், சேகரகுரு கிங்ஸிலி ஜான் தலைமையில் பண்டிகை ஆயத்த ஆராதனை, 2-ம் நாள் ஆண்கள் பண்டிகை, 3-ம் நாள் பெண்கள் பண்டிகை, இரவு கன்வென்சன் கூட்டம், 4-ம் நாள் வாலிப பெண்கள் பண்டிகை, கன்வெண்சன், 5-ம் நாள் காலை ஆலய பிரதிஷ்டை பண்டிகை ஆராதனையில் சேகர தலைவர் குரோவ்ஸ் பர்னபாஸ் தேவ செய்தி வழங்கினார்.
பண்டிகை சிறப்பு ஆராதனை, ஞானஸ்நான ஆராதனை, வாலிப ஆண்கள் பண்டிகையில் சத்திய நகரம் சேகரகுரு தனசீலன் தேவ செய்தி வழங்கினார். இரவு ஐ.எம்.எஸ். கலைநிகழ்ச்சிகள் நடந்தது. 6-ம் நாள் காலை அசன ஆயத்த ஆராதனை, மாலை அசன விருந்து, இரவு தோத்திர ஜெபம் நடைபெற்றது. நிறைவு நாளில் அறுப்பின் பண்டிகை நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை சேகரகுரு கிங்ஸிலி ஜான் தலைமையில் சபை ஊழியர், சபை நிர்வாகிகள் செய்திருந்தனர்.