கடவூர் பகுதி வறட்சியாக உள்ளதால் குளங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்: பாலகிருஷ்ணன் பேச்சு

கடவூர் பகுதி வறட்சியாக உள்ளதால் குளங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என தரகம்பட்டியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பாலகிருஷ்ணன் கூறினார்.

Update: 2023-04-05 19:10 GMT

பொதுக்கூட்டம்

கரூர் மாவட்டம், தரகம்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நிதியளிப்பு மற்றும் அரசியல் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தரகம்பட்டியில் தனிநீதிமன்றம் கட்ட தமிழக அரசு ஒப்புதல் வழங்கி உள்ளதால் அதனை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், கடவூர் பகுதி தேவாங்கு சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், இங்குள்ள கல்குவாரிகளை மூட மாவட்ட நிர்வாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,

குளங்களை நிரப்ப வேண்டும்

கடவூர் பகுதி வறட்சியாக உள்ளதால் குளங்களில் தண்ணீர் நிரப்பி நடவடிக்கை எடுக்க வேண்டும், மோடி அரசு கடந்த 8 ஆண்டுகளில் மிகப்பெரிய முதலாளிகளுக்கு ரூ.11 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்துள்ளது. ஆனால் சாதாரண மக்கள் பயன்பெறும் வகையில் தங்களை உருவாக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் குளித்தலை ஒன்றியங்களில் இருந்து கட்சி நிதியாக ரூ.3 லட்சத்து 25 ஆயிரம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணனிடம் வழங்கப்பட்டது.

இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்