வடகிழக்கு பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கையாக வெள்ளத் தடுப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவு

வடகிழக்கு பருவமழை ெதாடங்க உள்ள நிலையில் வெள்ள பாதிப்புகளை தடுக்க முன்னேற்பாடு பணிகளை மேறங்கொள்ள அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2022-09-24 17:58 GMT

ராணிப்பேட்டை

வடகிழக்கு பருவமழை ெதாடங்க உள்ள நிலையில் வெள்ள பாதிப்புகளை தடுக்க முன்னேற்பாடு பணிகளை மேறங்கொள்ள அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

ஆலோசனை கூட்டம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க இன்னும் சிலவாரங்களே உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மற்றும் முதல் நிலை மீட்போருக்கான பயிற்சி வகுப்பு நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது :-

ராணிப்பேட்டை மாவட்டத்தில் எதிர்வரும் வடகிழக்கு பருவமழையின்போாது பாதிப்புகள் வராமல் தவிர்க்க அலுவலர்கள் துரிதமாக பணியாற்றிட வேண்டும். தற்போதைய மழையால் பல ஏரிகளில் தண்ணீர் நிரம்பியுள்ளது. ஆகவே அலுவலர்கள் முன்னெச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.

பேரிடர் பாதிப்புகளை தவிர்க்கும் பொருட்டு வெள்ள தடுப்பு பணிகளை மேற்கொள்ளுதல், மழைநீர் வடிகால்களில் உள்ள அடைப்புகளை அகற்றுதல், ஏரி மற்றும் குளங்களின் கறைகளை பலப்படுத்துதல், கால்வாய் வடிகால்கள், ஏரி, குளங்களை தூர்வார வேண்டும்.

கட்டுப்பாடு அறை

பருவமழை குறித்த முன்னெச்சரிக்கை தகவல்களை வழங்கும் வகையில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கட்டுப்பாடு அறை ஏற்படுத்த வேண்டும்.

கிராமப்புறங்களில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடுத்தும் பொருட்டு இளைஞர்களை கண்டறிந்து அவர்களுக்கு பயிற்சி அளித்து தேவையான மீட்பு உபகரணங்களை வழங்கி ஆயத்த நிலையில் இருக்க வேண்டும்.

இவர் அவர் பேசினார்.

கூட்டத்தில் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வெள்ள பாதிப்பின் போது அலுவலர்கள் மற்றும் முதல் நிலை மீட்பு பணியில் ஈடுபடும் தன்னார்வலர்களுக்கு பல்வேறு பயிற்சிகளையும், செயல் விளக்கங்களையும் அளித்தனர்.

கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு குழுவின் 4-வது பட்டாலியன் படைப்பிரிவு கமாண்டர் சதீஷ்குமார், தீயணைப்பு அலுவலர் பாஸ்கர், துணை அலுவலர் சத்யா பிரசாத், பேரிடர் மேலாண்மை தாசில்தார் காமாட்சி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், முதல் நிலை மீட்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்