முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை சந்திப்பு
சென்னையில் நாளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் சந்திக்கிறார்.
சென்னை,
சென்னையில் நாளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் சந்திக்கிறார். மத்திய அரசின் அவசர சட்டம் மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் உள்ளதாக கூறி, அதை நிராகரிக்க ஆதரவு கோருகிறார்.
இந்த சந்திப்பின் போது அதிகாரிகள் நியமனம் தொடர்பாக மத்திய அரசின் அவசர சட்டம் குறித்து ஆலோசனை நடத்தலாம் என தகவல் வெளியாகி உள்ளது. நிதிஷ்குமார், சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து ஏற்கனவே ஆதரவு கோரினார் அரவிந்த் கெஜ்ரிவால் என்பது குறிப்பிடத்தக்கது.