சீமானை கைது செய்யக்கோரி அருந்ததியர் மக்கள் இயக்கத்தினர் ஊர்வலம்-போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு

சீமானை கைது செய்யக்கோரி அருந்ததியர் மக்கள் இயக்கத்தினர் ஊர்வலமாக சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-03-30 20:45 GMT

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அருந்ததியர் சமூகத்திற்கு எதிராக பேசியதாக கூறி, அவரை கைது செய்ய வலியுறுத்தி சேலம் குகை பெரியார் நினைவு வளைவு பகுதியில் இருந்து போலீஸ் கமிஷனர் அலுவலகம் வரை நேற்று அருந்ததியர் மக்கள் இயக்கம் சார்பில் ஊர்வலம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி இயக்க பொதுச்செயலாளர் பிரதாபன் தலைமையில் வக்கீல்கள் இளையராஜா, முகிலன், தூயவன், நரேஷ்குமார், சதீஸ் உள்பட 50-க்கும் மேற்பட்டவர்கள் அங்கு திரண்டு வந்தனர். அவர்கள் சீமானை கைது செய்ய கோரி அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த செவ்வாய்பேட்டை போலீசார் அவர்களை ஊர்வலமாக செல்வதற்கு மறுப்பு தெரிவித்து தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சீமானை கைது செய்ய கோரி கோஷமிட்டனர்.

மேலும் செய்திகள்