அருணாச்சலேஸ்வரர் கோவில் பாலாலயம்

கீழையூர் அருணாச்சலேஸ்வரர் கோவில் பாலாலயம் நடந்தது

Update: 2022-08-24 18:07 GMT

வேளாங்கண்ணி:

வேளாங்கண்ணி அருகே கீழையூரில் இந்து சமய அறநிலையை துறைக்கு சொந்தமான அருணாச்சலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கோவிலில் பணிகள் நடைபெற்றது. மேலும் கோவிலில் பாலாலயம் நடைபெற்றது. அப்போது கோவிலில் வளாகத்தில் யாக குண்டம் அமைத்து 2 கால பூஜைகள் நடைபெற்றன. பின்னர் சாமிக்கு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்