ஆறுமுகநேரியில்விநாயகர் கோவில் வருசாபிஷேகம்
ஆறுமுகநேரியில் விநாயகர் கோவில் வருசாபிஷேகம் நடந்தது.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி பேயன்விளை வினை தீர்க்கும் விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி மற்றும் வருசாபிஷேகம் நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு காலையில் விநாயகருக்கு சிறப்பு பூஜைகளும், தீபாராதனை நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் ெசய்தனர். இதேபோல் ஆறுமுகநேரி சுவாமி சன்னதி தெருவிலுள்ள அகில பாரத இந்து மகா சபா மற்றும் ஸ்ரீ சிவமயம் தசரா குழு சார்பில் 13-ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு 5 அடி உயர விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. முக்கிய தெருக்கள் வழியாக விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. இதில் இந்து மகாசபா நகர தலைவர் சேகர், ஒன்றிய தலைவர் சேர்ம துரை, கோவில் நிர்வாகி முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.