ஆறுமுகநேரி புனித சவேரியார் ஆலய திருவிழா தொடக்கம்

ஆறுமுகநேரி புனித சவேரியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Update: 2022-11-25 18:45 GMT

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி புனித சவேரியார் ஆலய திருவிழா நேற்று முன் தினம் இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கொடி ஊர்வலம்

ஆறுமுகநேரி புனித சவேரியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு கொடிகள் முக்கிய தெருக்கள் வழியாக ஊர்வலமாக ஆலயத்திற்கு கொண்டு வரப்பட்டது.

அந்த கொடிகளை திருச்செந்தூர் அமலிபுரம் பங்குத்தந்தை வில்லியம் சந்தானம் அடிகளார், காயல்பட்டினம் சிங்கித்துறை பங்கு தந்தை ஷிபாகர் அடிகளார், ஆறுமுகநேரி பங்குத்தந்தை அலாய்சிஸ் அடிகளார், பெரியதாழை துணை பங்கு தந்தை கிங்ஸ்லின் அடிகளார் ஆகியோர் அர்ச்சித்தனர்.

கொடியேற்றம்

இதை தொடர்ந்து கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது. பின்னர் திருவிழா திருப்பலி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

இத்திருப்பலியில் பாலர் சபையினர், நற்கருணை வீரர் சபையினர், அருட் சகோதரிகள் மற்றும் ஆசிரியர்கள் சிறப்பித்தனர். தொடர்ந்து விழா நாட்களில் காலையில் திருப்பலியும், மாலையில் மறையுறை, நற்கருணை ஆசிர் ஆகியவை நடைபெறுகிறது.

புனித சவேரியார் கப்பல் பவனி

ஒன்பதாம் நாளான டிச.2-ந் தேதி சிறப்பு திருப்பலியும் மாலையில் திருவிழா ஆடம்பர கூட்டு மாலை ஆராதனையும் நடைபெறுகிறது. இதில் தூத்துக்குடி ரோலிங்டண் அடிகளார் கலந்து கொள்கிறார். மேலும் சூசை ராஜ் அடிகளார் மறையுரை நிகழ்த்துகிறார். 10-ம் நாள் காலையில் மணப்பாடு மறை வட்ட முதன்மை குரு ஜான் செல்வம் அடிகளார் தலைமையில் திருப்பலி நடைபெறுகிறது.

அன்று மாலையில் புனித சவேரியார் சொரூபம் தாங்கிய கப்பல் பவனி ஆறுமுகநேரி மடத்துளை சவேரியார் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு வடக்கு பகுதியில் உள்ள புனித அன்னம்மாள் ஆலயம் வரை சென்று மீண்டும் ஆலயம் வந்து சேருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்