ஆறுமுகநேரியில் புகையிலை விற்ற பெட்டி கடைக்காரர் கைது
ஆறுமுகநேரியில் புகையிலை விற்ற பெட்டி கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி அருகிலுள்ள மஞ்சள்நீர் காயலை சேர்ந்த ஐயம்பெருமாள் மகன் காமராஜ்(வயது 60). வியாபாரி. இவர் ஆத்தூர் அருகிலுள்ள பழைய காயல் பஜாரில் பெட்டி கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் அரசு தடைசெய்துள்ள புகையிலை பொருட்களைவிற்பனை செய்து வந்துள்ளார்.
நேற்று இவரது கடையில் ஆத்தூர் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது விற்பனைக்கு வைத்திருந்த 790 புகையிலை பாக்கெட்டுகளை போலீார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு ெசய்து அவரை கைது செய்தனர்.