ஆறுமுகநேரிபாதக்கரை சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா

ஆறுமுகநேரி பாதக்கரை சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.

Update: 2023-01-27 18:45 GMT

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி கந்தசாமிபுரம் செல்லும் மெயின் ரோட்டில் வடக்கு சுப்பிரமணியபுரத்தில் அமைந்துள்ள பாதக்கரை சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளில் மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், சுதர்சன ஹோமம், தன பூஜை, ஆகியவை நடைபெற்றன. நேற்று வேத பாராயணம், திருமுறை பாராயணம், ஆகியவை ஓதப்பட்டு 2-ம் கால யாகசாலை பூஜையும், மகா பூர்ணாகுதி தீபாராதனை, யாத்ராதானம், கடம் புறப்பாடு ஆகியவை நடைபெற்றது. காலை 8.30 மணிக்கு கோபுர விமான கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து பாதக்கரை சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. பின்னர் மகேஸ்வர பூஜையும், அன்னதானமும் நடைபெற்றது. இரவில் திருவிளக்கு பூஜை, தீபாராதனை நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்