ஆறுமுகநேரியில்கே.டி.கோசல்ராம் நினைவு தினம்

ஆறுமுகநேரியில் கே.டி.கோசல்ராம் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

Update: 2023-01-27 18:45 GMT

ஆறுமுகநேரி:

முன்னாள் எம்.பி. கே.டி.கோசல்ராமின் 38-வது நினைவு தினம் ஆறுமுகநேரியில் உள்ள அவரது நினைவிடத்தில் அனுசரிக்கப்பட்டது. அவரது சமாதிக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து அவரது சிலைக்கு வியாபாரிகள் சங்கத் தலைவர் தாமோதரன் நாடார், முன்னாள் நகர அ.தி.மு.க. செயலாளர் அமிர்தராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் கார்த்திகேயன், உட்பட பலர் மாலை அணிவித்தனர்.

நிகழ்ச்சியில் ராமலட்சுமி அம்மன் கோவில் நிர்வாகிகள் மகாதேவன் நாடார், சுந்தர்,திருச்செந்தூர் வடக்கு ஒன்றிய இந்து முன்னணி தலைவர் ராமசாமி, ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி சுகுமார் லிங்கபாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்