மரக்காணம் கலவரத்தை கண்டித்து மறியல் வழக்கு-சேலம் கோர்ட்டில் அருள் எம்.எல்.ஏ. ஆஜர்

மரக்காணம் கலவரத்தை கண்டித்து மறியல் வழக்கு தொடர்பாக சேலம் கோர்ட்டில் அருள் எம்.எல்.ஏ. ஆஜரானார்.

Update: 2023-07-01 19:58 GMT

சேலம்,

கடந்த 2013-ம் ஆண்டு மரக்காணம் பகுதியில் ஏற்பட்ட கலவரத்தில் ஏராளமான பா.ம.க.வை சேர்ந்தவர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை கண்டித்து அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டபோது அவரை போலீசார் கைது செய்தனர். இதனை கண்டித்து சேலத்தில் மாவட்ட பா.ம.க. சார்பில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது பா.ம.க.வை சேர்ந்த அருள் உள்பட 44 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தனர்.

இந்த வழக்கு சேலம் 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் பா.ம.க.வை சேர்ந்த மாநகர் மாவட்ட செயலாளர் அருள் எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர் கதிர் ராஜரத்தினம், பசுமை தாயகம் மாநில இணை செயலாளர் சத்ரியசேகர், மாவட்ட வன்னியர் சங்க தலைவர் ஆறுமுகம், மாவட்ட துணை செயலாளர் ராஜமாணிக்கம், பகுதி செயலாளர் அண்ணாமலை உள்பட 40 பேர் நேற்று 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜராகினர். பின்னர் இந்த வழக்கு விசாரணையை வருகிற 2-ந் தேதிக்கு மாஜிஸ்திரேட்டு தினேஷ்குமார் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்