சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசன விழா

திருப்பத்தூர் பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிதசன விழா நடைபெற்றது.

Update: 2023-01-06 18:02 GMT

ஆருத்ரா தரிசன விழா

திருப்பத்தூரில் பழமை வாய்ந்த கோட்டை பிரமேஸ்வரர் கோவிலில் நேற்று ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை பிரமேஸ்வரர், சிவகாமி அம்மனுக்கு 16 வகையான பழ வகைகள், விபூதி, சந்தனம், இளநீர், புனித கங்கை நீர் உள்ளிட்டவற்றால் அபிஷேங்கள், சிறப்பு அலங்காரம் நடந்தது.

பின்னர் சிவகாமியம்மன், சமேத பிரமேஸ்வரர் 5 நிலை கொண்ட ராஜ கோபுரம் அருகே எழுந்தருளினார். பின்னர் கோவிலை வலம் வந்தார். முன்னதாக நேற்று ஏகாதசி ருத்ரயாகம் மற்றும் வேதபாராயணம் நடந்தது. நடராஜர் சமேத சிவகாமி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கோட்டை தெருவில் இருந்து செட்டித் தெரு, கச்சேரி தெரு, வழியாக திருவீதி உலா வந்தார். அப்போது ஒவ்வொரு வீட்டிலும் சாமிக்கு கற்பூரம் காட்டி பிரசாதங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் டாக்டர் லீலா சுப்பிரமணியம் உள்பட நிர்வாகிகள் செய்திருந்தனர்.

வீதி உலா

அதேபோன்று திருப்பத்தூர் முத்துக்குமாரசாமி கோவிலில் நடராஜர், சிவகாமி அம்மனுக்கு அபிஷேகம், பஞ்ச தீபாராதனை நடந்தது. பின்னர் கோபுர தரிசனத்தில் அம்மனுடன் எழுந்தருளி சுவாமி அருள் பாலித்தார். சாமி செட்டி தெருவில் உள்ள அங்கமுத்து விநாயகர் கோவிலில் உள்ள நடராஜருக்கு ஆருத்ரா தரிசனத்தையொட்டி சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது. பின்னர் திருவீதி உலா நடைபெற்றது.

இதேபோல் திருப்பத்தூர் அருகே உள்ள மடவாளம், கொரட்டி, சிவன்கோவில்களிலும் நடராஜருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்