தூத்துக்குடி சங்கரராமேசுவரர்கோவிலில் ஆருத்ரா தரிசனம்

தூத்துக்குடி சங்கரராமேசுவரர் கோவிலில் திருவாதிரை திருவிழாவை முன்னிட்டு ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-01-06 18:45 GMT

தூத்துக்குடி சங்கரராமேசுவரர் கோவிலில் திருவாதிரை திருவிழாவை முன்னிட்டு ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சங்கரராமேசுவரர் கோவில்

தூத்துக்குடியில் உள்ள பிரதான கோவில்களில் சங்கரராமேசுவரர் கோவில் ஒன்றாகும். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் திருவாதிரை திருவிழா சிறப்பாக நடந்து வருகிறது. இந்த விழாவை முன்னிட்டு தினமும் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. கடந்த 10 நாட்களாக மாணிக்கவாசகரின் திருவெம்பாவை பாடல்கள் பாடப்பட்டு பூஜைகள் நடந்தன. நேற்று திருவாதிரை திருவிழா நடந்தது. அதிகாலை 2 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து திருவனந்தல், 21 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் பல்வேறு பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தன.

ஆருத்ரா தரிசனம்

விழாவின் சிகர நிகழ்ச்சியாக கோவில் தலைமை அர்ச்சகர் செல்வம் பட்டர் தலைமையில், காலையில் ஆருத்ரா தரிசனம் நடந்தது. தொடர்ந்து பசுதீபாராதனை, தாண்டவ தீபாராதனை, திருமுறை பாடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. பின்னர் நடராஜர் சப்பரத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும், சேர்க்கை நிகழ்ச்சியும், சேர்க்கை தீபாராதனை நிகழ்ச்சியும் நடந்தன. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்