காணும் பொங்கலையொட்டி ஆற்றுப்படி திருவிழா

ஆரணியில் காணும் பொங்கலையொட்டி ஆற்றுப்படி திருவிழா நடந்தது.

Update: 2023-01-17 10:32 GMT

ஆரணி

ஆரணி புதுகாமூர் பகுதியில் உள்ள புத்திரகாமேட்டீஸ்வரர் கோவிலில் காணும் பொங்கலையொட்டி ஆற்றுப்படி திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இன்று ஆற்றுப்படி திருவிழா நடந்தது. இதையொட்டி அதிகாலையில் சாமிக்கு சிறப்பு அபிஷேகமும், மகா அலங்காரமும் நடந்தது.

கருவறை பெரியநாயகி அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. உற்சவர் சாமிகள் கமண்டல நாக நதி ஆற்று படுகை பகுதியில் இருந்து ஆற்றுப்படி திருவிழா படி பூஜையும் நடத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பக்தி சொற்பொழிவும் நடந்தது.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

காலை முதல் மாலை வரை தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டது. பொழுதுபோக்கு அம்சங்களான ராட்டினங்கள் இடம் பெற்று இருந்தன.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சிவாஜி, கோவில் ஆய்வாளர் முத்துச்சாமி மற்றும் பக்தர் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்