கலை இலக்கிய பெருமன்ற கூட்டம்
வேதாரண்யத்தில் கலை இலக்கிய பெருமன்ற கூட்டம்
வேதாரண்யம்:
வேதாரண்யத்தில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் நாகை மாவட்டக்குழு கூட்டம் தலைவர் புயல் குமார் தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளர் அம்பிகாபதி, மாவட்ட பொருளாளர் கைலாசம், மாநிலக்குழு உறுப்பினர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் பார்த்தசாரதி, கவிஞர்.குணசேகரன், கிளைத் தலைவர் குழந்தைவேலு, துணை செயலாளர் செந்தில்நாதன், கவிஞர் வேதரத்தினம், நாட்டுப்புறப் பாடகர் கோவி.ராசேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். உலக தாய்மொழி தினத்தையொட்டி வருகிற 26-ந் தேதி சென்னையில் நடைபெற உள்ள இந்தி, சமஸ்கிருத திணிப்புக்கு எதிரான கருத்தரங்கில் பங்கேற்பது. வருகிற 21-ந் ேததி ஆயக்காரன்புலத்தில் உலக தாய்மொழி நாள் கருத்தரங்கம் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.