தூத்துக்குடி கலைஞர் நூற்றாண்டு விழா பட்டிமன்றம்

தூத்துக்குடியில் கலைஞர் நூற்றாண்டு விழா பட்டிமன்றத்தை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.

Update: 2023-07-01 19:00 GMT

தூத்துக்குடியில் கலைஞர் நூற்றாண்டு விழா பட்டிமன்றத்தை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.

பட்டிமன்றம்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா பட்டிமன்றம் டூவிபுரத்தில் நடந்தது. வடக்கு மாவட்ட செயலாளரும், சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமை தாங்கி, தொடங்கி வைத்து பேசினார். மாநகராட்சி மேயர் என்.பி. ஜெகன் முன்னிலை வகித்தார். பட்டிமன்ற நடுவராக தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளரும், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவருமான திண்டுக்கல் ஐ.லியோனி கலந்து கொண்டார்.

'தமிழ்நாட்டு வளர்ச்சியில் பெரும் பங்கு வகிப்பது கலைஞரின் மக்கள் நல திட்டங்களே, திராவிட கொள்கைகளே' என்ற தலைப்புகளில் பட்டிமன்றம் நடந்தது.

மக்கள் நலத்திட்டங்களே என்ற தலைப்பில் ஆசிரியர் நாகநந்தினி, பேராசிரியர் விஜயகுமார், திராவிட கொள்கைகளே என்ற தலைப்பில் கவிஞர் இனியவன், பேராசிரியர் ராஜதுரை ஆகியோர் பேசினர்.

இதில் மாநில பேச்சாளர் இருதயராஜ், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாநகர துணை செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அங்கன்வாடி மையம்

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட அம்பேத்கர்நகர், கிருஷ்ணராஜபுரம், காதர்மீரான் நகர் ஆகிய பகுதிகளில் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தலா ரூ.13 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் புதிதாக அங்கன்வாடி மையங்கள் கட்டப்பட்டு உள்ளன. இதன் திறப்பு விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு அங்கன்வாடி மையங்களை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார். நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்