விபத்தில் காலை இழந்த தொழிலாளிக்கு செயற்கை கால்
விபத்தில் காலை இழந்த தொழிலாளிக்கு ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் செயற்கை கால் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி பண்டாரம்பட்டியை சேர்ந்தவர் விக்னேஷ். கட்டிட தொழிலாளியான இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பி வந்த போது விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் அவர் வலது காலை இழந்து கடும் சிரமத்திற்கு உள்ளானார்.
இந்த நிலையில் ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் செயற்கை கால் ஒன்றை அவருக்கு கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து அதற்கான மருத்துவரை வரவழைத்து அவர் காலுக்கு தகுந்த அளவில் புதிதாக செயற்கை கால் ஒன்று தயாரிக்கப்பட்டது. பின்னர் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் சார்பில் சமூக வளர்ச்சி பிரிவு அலுவலர்கள் விக்னேஷிடம் செயற்கை காலை வழங்கினர்.