கலைபயிற்சி பள்ளி உரிமையாளர் போக்சோ சட்டத்தில் கைது

தூத்துக்குடியில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கலைபயிற்சி பள்ளி உரிமையாளர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-12-13 18:45 GMT

தூத்துக்குடியில் 14 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் கலை பயிற்சி பள்ளி உரிமையாளர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

பள்ளி உரிமையாளர்

தூத்துக்குடியை சேர்ந்தவர் முபாரக் (வயது 40). இவர் தூத்துக்குடியில் தனியார் கலை பயிற்சி பள்ளிக்கூடத்தை நடத்தி வருகிறார். இந்த பள்ளிக்கூடத்தில் சிலம்பம், பரதநாட்டியம், ஸ்கேட்டிங் உள்ளிட்டவை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

கைது

இந்த நிலையில் 14 வயது சிறுவனை முபாரக் பாலியல் தொல்லை கொடுத்ததுடந் வன்புணர்ச்சி செய்ததாக, சிறுவனின் தாய் தூத்துக்குடி தென்பாகம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தார். தொடர்ந்து விசாரணை நடத்தி முபாரக்கை கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்