பள்ளி- கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள்

அரசின் சாதனை விளக்க கண்காட்சியில் பள்ளி- கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

Update: 2023-02-09 18:45 GMT

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவல்துறை அணிவகுப்பு மைதானத்தில் அரசின் திட்டங்கள், செயல்பாடுகள் குறித்த ஓயா உழைப்பின் ஓராண்டு சாதனைகளை விளக்கும் புகைப்பட கண்காட்சி கடந்த 5-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கண்காட்சி தொடர்ந்து வருகிற 14-ந் தேதி வரை நடைபெறுகிறது. இக்கண்காட்சியையொட்டி ஊரக வளர்ச்சித்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டம், உணவு பாதுகாப்புத்துறை மூலம் பாரம்பரிய உணவு மற்றும் ஊட்டச்சத்து வகைகள் கொண்ட உணவுத்திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டு நடந்து வருகிறது. மேலும் இக்கண்காட்சியில் ஒவ்வொரு நாளும் மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை தமிழ்நாட்டின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை பறைசாற்றும் விதத்தில் அரசு பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகளின் சிலம்பாட்டம், கரகாட்டம், நடனம், மல்லர் கம்பம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.

இக்கண்காட்சியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா தலைமையிலான கல்வித்துறை அலுவலர்களும், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நாகராஜபூபதி தலைமையிலான அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து நடத்தி வருகின்றனர். எனவே பொதுமக்கள், இக்கண்காட்சியில் கலந்துகொண்டு அரசின் சாதனை திட்டங்களை தெரிந்துகொள்வதோடு, மாணவ- மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளையும் கண்டுகளிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்