குஞ்சப்பனை அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு வாழும் கலைப் பயிற்சி

குஞ்சப்பனை அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு வாழும் கலைப் பயிற்சி

Update: 2023-07-12 19:30 GMT


கோத்தகிரி


கோத்தகிரி அருகே உள்ள குஞ்சப்பனை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான பழங்குடியின கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்கி கல்வி பயிலுவதற்காக குஞ்சப்பனை கிராமத்தில் அரசு உண்டு உறைவிடப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு வசித்து வரும் பழங்குடியின மக்களின் வாழ்க்கை சூழ்நிலைகளை மாற்றி அவர்களுக்குள் இருக்கும் போதைப் பொருள் ஒழிப்பு முன்வைத்து ஒருங்கிணைந்த நீலகிரி பாதுகாப்பு குழு (யு.என்.சி.எஸ்) மற்றும் வாழும் கலைப் பயிற்சி அளிக்கும் வேதாந்திரி மகரிஷி ஆசிரமத்தின் இணைந்து பழங்குடியின மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும், போதைப் பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு அளிக்கவும் முடிவு செய்தது. இதையடுத்து பள்ளியில் தங்கி படிக்கும் மாணவ, மாணவிகள் மற்றும் ஆதிவாசி பழங்குடியின மக்களுக்கு ஒரு மாத பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதில் போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், விளைவுகள் குறித்து விழிப்புணர்வு அளிக்கபடுவதுடன் தியானம் மற்றும் வாழும் கலைப் பயிற்சிகளும் அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.





Tags:    

மேலும் செய்திகள்