கலை இலக்கிய பெருமன்ற விழா
சீர்காழியில் கலை இலக்கிய பெருமன்ற விழா நடந்தது.
சீர்காழி:
சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட தலைவர் தங்க சேகர் தலைமை தங்கினார். நிர்வாகிகள் ராமன், குணசேகரன் முன்னிலை வகித்தனர். வட்டத் தலைவர் வீரசேகரன் வரவேற்று பேசினார். விழாவில் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., பேராசிரியர் மதுரை சந்திரன், திரைப்பட இயக்குனர் களஞ்சியம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். தொடர்ந்து பல்வேறு தலைப்புகளில் பட்டிமன்ற நிகழ்ச்சி நடந்தது. பின்னர் நிர்வாகிகளுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. முன்னதாக கலை விழிப்புணர்வு ஊர்வலம் சீர்காழி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள தமிழிசை மூவர் மணிமண்டபத்தில் இருந்து தொடங்கி ஊர்வலமாக சென்று பழைய பஸ் நிலையத்தை அடைந்தது. ஊர்வலத்தில் நகர்மன்ற தலைவர் துர்கா ராஜசேகரன், முன்னாள் நகர் மன்ற தலைவர் கணிவண்ணன், மாநில குழு உறுப்பினர் சுந்தரய்யா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.