அரசு பள்ளியில் கலைத்திருவிழா

வள்ளியூர் அரசு பள்ளியில் கலைத்திருவிழா நடந்தது.

Update: 2022-12-02 20:27 GMT

வள்ளியூர் தெற்கு:

வள்ளியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் கலைத்திருவிழா நடந்தது. மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ரெஜினி தலைமை தாங்கி, நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார். வள்ளியூர் வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) மூக்கம்மாள் முன்னிலை வகித்தார். இதில் மாணவ-மாணவிகளுக்கு நாட்டுப்புற நடனம், குழு போட்டி, தனிநபர் நடனம், ஓவியம், கட்டுரை உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் தமிழக நாட்டுப்புற இசைக்கலை மன்றத்தின் மாநில அமைப்பு செயலாளர் பழவூர் சுபாஷ் சந்திரபோஸ், நாதஸ்வர கலைஞர் சங்கர், பறை இசை கலைஞர் கலைவாணன், இசை ஆசிரியர் செல்வி நித்யஸ்ரீ மற்றும் பெற்றோர்கள், பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்