விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் என்.ஆர். நகரை சேர்ந்தவர் கணேசன் (வயது 52). சம்பவத்தன்று இவர் மாவட்ட கோர்ட்டு எதிரே உள்ள வங்கியின் முன்பாக உடலில் மண்எண்ெணய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை தடுத்து நிறுத்தி காப்பாற்றினார். பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் தல்லாகுளம் போலீசார் அங்கு வந்து அவரை மீட்டனர். பின்னர் கணேசன் தற்கொலைக்கு முயற்சி செய்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் போலீசார் அவர் தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.