மோட்டார்சைக்கிளுக்கு தீ வைப்பு

மோட்டார்சைக்கிளுக்கு தீ வைக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2022-12-31 18:45 GMT

கீழக்கரை, 

ஏர்வாடி தர்கா சேர்மன் தெருவில் வசிப்பவர் அபுதாஹிர் (வயது 44). இவர் ஏர்வாடி தர்கா அருகில் கடை வைத்து தொழில் செய்து வருகிறார். நேற்று இரவு அவர் வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு தனது வீட்டின் காம்பவுண்ட் சுவருக்குள் மோட்டார்சைக்கிளை நிறுத்தி விட்டு தூங்க சென்றார். அப்போது வெளியே சத்தம் கேட்டு வந்து பார்த்த போது அவருடைய மோட்டார்சைக்கிள் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தீயை அணைத்தார். இதுகுறித்து அவர் ஏர்வாடி போலீசில் புகார் செய்தார். அதில் மர்ம நபர்கள் தனது மோட்டார்சைக்கிளுக்கு தீ வைத்துவிட்டு தப்பி சென்றதாக கூறியுள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்