திருப்புவனம்,
திருப்புவனம் போலீஸ் சரகத்தை சேர்ந்தது கீழடி. இங்கு மிட்டாய் தயாரிக்கும் தனியார் கம்பெனி உள்ளது. இந்த கம்பெனியில் 25 வயது இளம்பெண்ணும், மதுரை முனிச் சாலை பகுதியை சேர்ந்த இப்ராகிம் ஷா (42) என்பவரும் வேலை பார்த்து வந்துள்ளனர். இப்ராகிம் ஷா ஏற்கனவே திருமணமானவர். இந்தநிலையில் முதல் திரு மணத்தை மறைத்து, இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதில் அந்த பெண் 7 மாத கர்ப்பிணியானார். இந்த நிலையில் இளம்பெண் திருமணம் செய்ய வற்புறுத்திய போது, இப்ராகிம் ஷா திருமணம் செய்ய மறுத்து தரக்குறைவாக பேசினாராம். இதுகுறித்த புகாரின்பேரில் மானாமதுரை போலீஸ் துணை சூப்பிரண்டு கண்ணன் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின ்கீழ் வழக்குப் பதிவு செய்து இப்ராகிம்ஷாவை கைது செய்துள்ளார்.