கள்ளக்குறிச்சியில் கஞ்சா விற்ற வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

கள்ளக்குறிச்சியில் கஞ்சா விற்ற வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-11-25 18:45 GMT

கள்ளக்குறிச்சி ஏமப்பேர் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் பச்சமுத்து மகன் ஆதிகேசவன் (வயது 21). சம்பவத்தன்று இவர் கரியப்பநகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தபோது, கள்ளக்குறிச்சி போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த ஆதிகேசவனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டருக்கு, கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் ஷ்ரவன்குமார் உத்தரவின் பேரில் ஆதிகேசவனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கள்ளக்குறிச்சி போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்