வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-10-10 18:45 GMT

ஊட்டி, 

தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கொள்ளை முயற்சி

திருச்சி மணப்பாறையை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 55). இவரது மகன் யுவராஜ் (25). இவர்கள் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து திருச்சிக்கு காய்கறி அனுப்பும் வியாபாரிகளுக்கு, பணத்தை வசூல் செய்து கொடுக்கும் ஏஜெண்டுகளாக செயல்பட்டு வந்தனர். இந்தநிலையில் கடந்த மாதம் 4-ந் தேதி 2 பேரும் காய்கறி பட்டுவாடா தொகை ரூ.32 லட்சத்தை வாங்கிக் கொண்டு, திருச்சியில் இருந்து பஸ்சில் ஊட்டிக்கு வந்தனர். அப்போது ஏ.டி.சி. பகுதியில் பஸ்சில் இருந்து இறங்கிய தந்தை, மகனை சுற்றி வளைத்த மர்ம கும்பல் கத்தியால் தாக்கி பணத்தை பறிக்க முயன்றது. இந்த சம்பவத்தில் ரூ.32 லட்சம் பணம் கொள்ளையர்களிடம் சிக்காமல் தப்பியது.

குண்டர் சட்டத்தில் கைது

இந்த சம்பவம் தொடர்பாக திருச்சியை சேர்ந்த சுபாஷ் சந்திரபோஷ் (30), மகாராஜா (30), திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை சேர்ந்த மாதவன் (20), நிதீஷ் குமார் (20) உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்திற்கு மகாராஜா மூளையாக செயல்பட்டது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து மகாராஜாவை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத், கலெக்டருக்கு பரிந்துரைத்தார். அதன்படி மகாராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் அம்ரித் உத்தரவிட்டார். இதையடுத்து குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான நகல் சிறையில் உள்ள மகாராஜாவிடம் வழங்கப்பட்டது. ஏற்கனவே அவர் மீது திருச்சியில் கொலை முயற்சி வழக்கும், 10-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்