குண்டர் சட்டத்தில் கைது
கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
நாகை மாவட்டத்தில் கஞ்சா கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் பரிந்துரையின் பேரிலும், மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் உத்தரவின் பேரிலும் வேதாரண்யம் பகுதியில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட அகஸ்தியன்பள்ளியை சேர்ந்த வேதையன் (வயது53), கோடியக்காடு பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் (43), மதுரை மாவட்டம் பேரையூர் பகுதியைச் சேர்ந்த மாயக்கிருஷ்ணன் (29) ஆகிய 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் அவர்களிடமிருந்து 300 கிலோ கஞ்சா, குற்றவாளிகளின் வங்கி கணக்குகளை நிரந்தரமாக முடக்கம் செய்தும், ரூ.4.69 லட்சம் மதிப்புள்ள அவர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடந்த 4 மாதங்களில் கஞ்சா, கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் கடத்தல் குற்றத்தில் ஈடுபட்ட 18 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங் தெரிவித்தார்.