மது போதையில் பெற்றோருக்கு அரிவாள் வெட்டு
தேன்கனிக்கோட்டை அருகே மது போதையில் பெற்றோரை அரிவாளால் வெட்டிய மகனை போலீசார் கைது செய்தனர்.
தேன்கனிக்கோட்டை
தேன்கனிக்கோட்டை அருகே மது போதையில் பெற்றோரை அரிவாளால் வெட்டிய மகனை போலீசார் கைது செய்தனர்.
அரிவாள் வெட்டு
தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அடைக்கலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மதலைமுத்து (வயது 55). கூலித்தொழிலாளி. இவருக்கு அந்தோனியம்மாள் (50) என்ற மனைவியும், நிர்மல்குமார் (28) என்ற மகனும், டெய்சிமேரி என்ற மகளும் உள்ளனர். தொழிலாளியான நிர்மல்குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. நேற்று முன்தினம் நிர்மல்குமார் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்து தனது தாயாரிடம் தண்ணீர் கேட்டுள்ளார்.
அப்போது நாங்கள் சாப்பிட்டு கொண்டு இருக்கிறோம். இதனால் தண்ணீரை எடுத்து குடிக்குமாறு அவர் கூறி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர், தனது தாயாரை தகாத வார்த்தையால் திட்டி அரிவாளால் வெட்டி உள்ளார். இதை தடுக்க வந்த தந்தை மதலைமுத்துவையும் அரிவாளால் வெட்டி உள்ளார்.
மகன் கைது
இதில் படுகாயம் அடைந்த கணவன்-மனைவி 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில் அந்தோனியம்மாள் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து நிர்மல்குமாரை கைது செய்தனர்.