போலிபாஸ்போர்ட்டில் திருச்சி வந்தவர் கைது
போலிபாஸ்போர்ட்டில் திருச்சி வந்தவர் கைது செய்யப்பட்டார்.
செம்பட்டு, ஆக.11-
மலேசியாவில் இருந்து ஏர் ஏசியா விமானம் நேற்று காலையில் திருச்சி விமான நிலையம் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். சோதனையில் மயிலாடுதுறை வானதி ராஜபுரத்தை சேர்ந்த ரங்கபாஷ்யம் (வயது 49) என்பவர் கடந்த 2019-ம் ஆண்டு போலி முகவரியில் பாஸ்போர்ட் பெற்று மலேசியா சென்றுவிட்டு திருச்சி திரும்பியது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் ஏர்போர்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரங்கபாஷ்யத்தை கைது செய்தனர்.