கோவில்பட்டியில் வழிப்பறி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவில்பட்டியில் வழிப்பறி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

Update: 2022-06-08 15:02 GMT

தூத்துக்குடி:

கோவில்பட்டி சாஸ்திரி நகரை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவருடைய மகன் முத்துக்காளை (வயது 25). இவரை வழிப்பறி வழக்கில் கோவில்பட்டி மேற்கு போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் முத்துக்காளையை கைது செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை போலீஸ் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லிதேவ் ஆனந்த் பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினார்.

நடப்பு ஆண்டில் இதுவரை போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 27 பேர் உட்பட 111 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்