மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில்களை கடத்தியவர் கைது
மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில்களை கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் கோரைக்குழி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள பஸ் நிலையம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் மறைத்து வைத்திருந்த 17 மது பாட்டில்களை போலீசார் கைப்பற்றினர். விசாரணையில், அவர் கோரைக்குழி கீழத்தெருவை சேர்ந்த சேதுபதி (வயது 30) என்பதும், மோட்டார் சைக்கிளில் மது பாட்டில்களை கடத்தி சென்று விற்பனைக்கு முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.