சிறுவர்களுக்கு போதை மாத்திரை விற்றவர் கைது
சிறுவர்களுக்கு போதை மாத்திரை விற்றவர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி பாலக்கரை செங்குளம் காலனி பகுதியில் சிறுவர்களுக்கு போதை மாத்திரை விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதிக்கு சென்ற போலீசார் தீவிர சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த ஹரிபிரசாத் (வயது 20), உப்புப்பாறையை சேர்ந்த ஒரு வாலிபர் ஆகியோர் சிறுவர்களிடம் போதை மாத்திரை மற்றும் போதை ஊசி விற்றது தெரியவந்தது. போலீசாரை கண்டதும் 2 பேரும் ஓட முயன்றனர். உடனே போலீசார் ஹரிபிரசாத்தை மடக்கி பிடித்தனர். மற்றொருவர் தப்பியோடிவிட்டார். இது குறித்து பாலக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் நிக்சன் வழக்குப்பதிவு செய்து, ஹரிபிரசாத்தை கைது செய்தார். அவரிடம் இருந்து 149 போதை மாத்திரைகள் மற்றும் 5 ஊசிகளை பறிமுதல் செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகிறார்கள்.