அனுமதியின்றி பட்டாசு தயாரித்தவர் கைது
அனுமதியின்றி பட்டாசு தயாரித்தவரை போலீசார் கைது செய்தனர்.
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிமுருகன் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அங்குள்ள கிழக்கு தெருவில் உள்ள ஒரு தகர செட்டில் சோதனை செய்த போது அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்த பொன்னு பாண்டியன் (வயது44) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த 30 கிலோ சோல்சாவெடிகள், சரவெடிகள் 5 பெட்டி மற்றும் மூலப்பொருட்களையும் வெம்பக்கோட்டை போலீசார் பறிமுதல் செய்தனர்.