ரெட்டிச்சாவடி அருகேபீர்பாட்டிலால் மூதாட்டியை தாக்கியவா் கைது

ரெட்டிச்சாவடி அருகே பீர்பாட்டிலால் மூதாட்டியை தாக்கியவா் கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2023-05-28 18:45 GMT


ரெட்டிச்சாவடி, 

ரெட்டிச்சாவடி அருகே உள்ள புதுக்கடை கிராமத்தை சேர்ந்தவர் சுப்புராயன் மனைவி கிருஷ்ணவேணி (வயது 73). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கும் சொத்து சம்பந்தமாக முன்விரோத தகராறு இருந்து வருகிறது. சம்பவத்தன்று சுரேஷ் உள்ளிட்ட 4 பேர் கொண்ட கும்பல் கிருஷ்ணவேணியிடம் தகராறில் ஈடுபட்டதுடன், அவரை பீர பாட்டிலால் தாக்கினர். மேலும் வீட்டில் இருந்த டி.வி.யை சேதப்படுத்தி, கிருஷ்ணவேணிக்கு கொலை மிரட்டல் விடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் காயமடைந்த கிருஷ்ணவேணி கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதோடு, இதுபற்றி ரெட்டிச்சாவடி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் நர்மதா, கிருஷ்ணமூர்த்தி, உத்திராம்பாள் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து, சுரேசை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்