கிருஷ்ணகிரியில் 15 டன் ரேஷன் அரிசி கடத்திய வழக்கில் முக்கிய குற்றவாளி உள்பட 2 பேர் கைது

Update: 2023-06-30 19:45 GMT

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் 15 டன் ரேஷன் அரிசி கடத்திய வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ரேஷன் அரிசி கடத்தல்

கிருஷ்ணகிரி மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை சார்பில் 15 டன் ரேஷன் அரிசி கடத்திய வழக்கில் கருணாகரன் என்பவர் கடந்த 22-ந் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் தலைமறைவு குற்றவாளிகளை பிடிக்க குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறையின் ஐ.ஜி. காமினி உத்தரவிட்டார்.

அதன்பேரில் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறையின் கோவை மண்டல போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி மேற்பார்வையில் போலீசார் முக்கிய குற்றவாளியும், ரேஷன் அரிசி அனுப்பி வைத்தவருமான திருவண்ணாமலை திருவள்ளுவர் நகரை சேர்ந்த பிச்சாண்டி (வயது 51), அவரது கூட்டாளியான ஓசூரை சேர்ந்த அருண் ஆகியோரை தேடி வந்தனர்.

௨ பேர் கைது

இந்த நிலையில் சேலம் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் நேற்று சேலம் மாவட்டம் ஆத்தூர் புத்திரகவுண்டம்பாளையம் முருகன் கோவில் பிரிவு ரோடு அருகில் பதுக்கி இருந்த பிச்சாண்டி மற்றும் அருண் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.அவர்கள் 2 பேரையும் கிருஷ்ணகிரி குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்