தொழிலாளியிடம் கத்தியை காட்டி பணம் பறிக்க முயற்சிகார் டிரைவர் கைது

Update: 2023-06-16 20:51 GMT

சேலம்

சேலத்தில் தொழிலாளியிடம் கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்ற கார் டிரைவர் கைது செய்யப்பட்டார்.

பணம் பறிக்க முயற்சி

சேலம் அம்மாபேட்டை அருகே உள்ள நஞ்சம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 47). கூலி தொழிலாளி. இவர் நேற்று செங்கல்அணை பகுதியில் நடந்து சென்றார். அப்போது ஒருவர் அவரை தடுத்து நிறுத்தி கத்தியை காண்பித்து பணம் பறிக்க முயன்றார்.

இது குறித்து அவர் அம்மாபேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக சந்தேகத்தின் பேரில் பொன்னம்மாபேட்டை கார்பெட் பகுதியை சேர்ந்த கார் டிரைவர் லெனின் (31) என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

கைது

அப்போது அவர், சங்கரிடம் பணம் பறிக்க முயன்றதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து லெனினை போலீசார் கைது செய்தனர். தொழிலாளியிடம் கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்