மொரப்பூர்
மொரப்பூர் அருகே உள்ள பனமரத்துப்பட்டியை சேர்ந்தவர் சிங்காரம் (வயது 49). தொழிலாளி. இவரது மனைவி கண்ணம்மாள் (45). இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கடந்த 28-ந் தேதி சிங்காரம் எம்.வேட்ரப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவிற்கு சென்று விட்டு வகுத்தானூருக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது சிங்காரத்தின் மகன் விஜய் (29), மனைவி கண்ணம்மாள் (45), மருமகன் இளவரசன் ஆகியோர் சிங்காரத்திடம் தகராறு செய்து சரமாரியாக தாக்கினர். இதுகுறித்த புகாரின் பேரில் மொரப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வான்மதி வழக்குப்பதிவு செய்து விஜய், கண்ணம்மாள், இளவரசன் ஆகிய 3 பேரையும் கைது செய்தார்.