போடி அருகே கள்ளச்சாராயம் காய்ச்சியவர் கைது
போடி அருகே கள்ளச்சாராயம் காய்ச்சியவர் கைது செய்யப்பட்டார்.
போடி தாலுகா போலீசார் நேற்று மாலை அணைக்கரைப்பட்டியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள மயானம் அருகில் ஒருவர் சாராயம் காய்ச்சுவதற்கான வேலைகளை செய்து கொண்டிருந்தார். இதனை பார்த்த போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர், போடி அருகே விசுவாசபுரம் மேற்குதெருவை சேர்ந்த கருப்பையா என்பது தெரியவந்தது. மேலும் அவரிடம் சாராயம் காய்ச்சுவதற்கான பொருட்களும், ஏற்கனவே காய்ச்சி வைத்திருந்த கள்ளச்சாராயம் பிளாஸ்டிக் பாட்டில்களில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கருப்பையாவை கைது செய்தனர்.